இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

2 mins read
9b34b732-c0b4-4539-9ee7-d78821fe3459
ஃபஹாட் சித்திக் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘எஸ்காட்’ எனப்படும் இன்பத்தோழி ஒருவரிடமிருந்து இலவசமாகப் பாலியல் சேவை பெற முயன்ற இளைஞருக்குக் குறைந்தது ஆறு மாத சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நிகழ்ந்தபோது 20 வயது ஃபஹாட் சிதிக்கி காவல்துறையில் முழுநேர தேசிய சேவையாளராக இருந்தார்.

தமது காவல்துறை தேசிய சேவையாளர் அட்டையை அந்தப் பெண்ணிடம் காட்டி தமது ஆசைகளுக்கு இணங்காவிடில் அதிகாரிகளிடம் அவரைப் பற்றி புகார் செய்யப்போவதாக ஃபஹாட் மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பெண்ணிடமிருந்து ஃபஹாட் எவ்வித பாலியல் சேவையும் பெறாமல் அவரது அறையைவிட்டு வெளியேறினார். அப்போது அந்தப் பெண் அச்சம் அடைந்து தமது தமது முகவரிடம் கைப்பேசி வழியாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் சேவை பெற முயன்றதை ஃபஹாட் ஒப்புக்கொண்டார்.

அந்தக் குற்றச் செயல் நிகழ்ந்தபோது ஃபஹாட், ஆர்ச்சர்ட் அக்கம்பக்க காவல்துறை நிலையத்தில் அதிகாரியாக இருந்ததாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று லொகான்டோ இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த எண்ணுடன் தொடர்புகொண்டு அப்பெண்ணின் சேவைகள் பற்றி ஃபஹாட் விசாரித்தார்.

அப்பெண் மெர்பாவ் சாலையில் உள்ள ராபர்ட்சன் கீ ஹோட்டலில் தங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரச் சேவைக்கு அவர் $400 வசூலிப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அன்றிரவு 9 மணி அளவில் ஃபஹாட் அவரது அறைக்குச் சென்றார்.

விளம்பரத்தில் பார்த்த பெண் அவரல்ல என்று அப்பெண்ணிடம் ஃபஹாட் கூறினார்.

ஆர்வம் இல்லாதது போல காட்டிக்கொண்டு சிறிது நேரத்தில் மீண்டும் அந்த அறைக்கு ஃபஹாட் திரும்பினார்.

தமக்கு இலவசப் பாலியல் சேவை வழங்காவிட்டால் அவரைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கப்போவதாக ஃபஹாட் மிரட்டினார்.

இதைக் கேட்டு அந்தப் பெண் அழுதார். இப்போதுதான் சிங்கப்பூருக்கு வந்ததாக ஃபஹாட்டிடம் தெரிவித்தார்.

இதைப் பார்த்து ஃபஹாட் அறையிலிருந்து வெளியேறினார்.

ஃபஹாட்டின் இந்தச் செயல் குறித்து 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று லஞ்ச, ஊழல் புலன்விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.

அவர் மீது நவம்பர் மாதம் 24ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும் அவர் முன்களப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தீர்ப்புக்கு எதிராக ஃபஹாட் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

அவர் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்