தனது 14 வயது முதல் தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இளையர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அந்த இளையர் 2017ஆம் ஆண்டு ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தியுள்ளார். அதன் பின்னர் சில பெண்களிடம் அதேபோன்று நடந்துகொண்டுள்ளார்.
இளையர் மீது 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் பின்னர் அவர் பிணையில் வெளிவந்தார்.
இருப்பினும் அந்த இளையர், ரயில் நிலையங்களில் 5 முறை பெண்களை ஆபாசமாகக் காணொளிகள் எடுத்துள்ளார்.
அந்தக் குற்றங்களை அவர் நவம்பர் 2022 முதல் ஜனவரி 2023 காலகட்டத்தில் செய்துள்ளார்.
தற்போது 20 வயதான அந்த இளையர் 18 வயதுக்குகீழ் உள்ள சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை வெளியிடாமல் இருக்கும் நோக்கத்தில் இளையரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இளையர் தனது பள்ளியில் பயிலும் மாணவிகளிடமும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இளையருக்கு அக்டோபர் மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.