மசேநி சிறப்பு, மெடிசேவ் கணக்கு வட்டி விகிதங்கள் சற்று கூடுகின்றன

மத்திய சேமநிதி (மசேநி) உறுப்பினர்களின் சிறப்பு, மெடிசேவ் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு 0.03 விழுக்காட்டுப் புள்ளி உயர்ந்து ஆண்டுக்கு 4.04 விழுக்காடு என்ற நிலையை எட்டும்.

மத்திய சேமநிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் வியாழக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் இதைத் தெரிவித்தன.

10 ஆண்டு சிங்கப்பூர் அரசாங்க நிதிப் பங்குகளின் 12 மாத சராசரி லாப ஈவு அடிப்படையில் வட்டி விகித உயர்வு இடம்பெறுகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு சாதாரண கணக்கிற்கும் ஓய்வுக்கால கணக்கிற்கும் வட்டி விகிதங்கள் முறையே 2.5 விழுக்காடு, 4 விழுக்காடு என்ற அளவில் தொடர்ந்து இருக்கும்.

இதற்கிடையே, மசேநி உறுப்பினர்கள் தங்களது சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்கால கணக்குகளில் அடுத்த ஆண்டு தொடர்ந்து குறைந்தது 4 விழுக்காடு வட்டியைப் பெறுவர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நிச்சயமற்ற வட்டி விகிதச் சூழலில் மசேநி உறுப்பினர்களுக்கு இது நிச்சயத்தை இது வழங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்கால கணக்குகளுக்கு 4 விழுக்காடு என்ற குறைந்தபட்ச வட்டி விகிதத்தை அரசாங்கம் 2008லிருந்து கட்டிக்காத்து வந்துள்ளது. இவ்வாண்டு ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான மூன்று மாதங்களில் சிறப்பு, மெடிசேவ் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் 4 விழுக்காட்டிற்குமேல் சென்றன.

மசேநி உறுப்பினர்கள் நியாயமான வட்டியைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கடன்களுக்கான சலுகையுடன் கூடிய வட்டி விகிதம் அடுத்த மூன்று மாதங்களுக்கு, ஆண்டுக்கு 2.6 விழுக்காடு என்ற நிலையில் மாற்றமின்றி இருக்கும். சாதாரண கணக்கிற்கான வட்டி விகிதத்தைவிட அது 0.1 விழுக்காடு கூடுதலாக இருக்கும்.

மேலும், 55 வயதுக்குக்கீழ் உள்ள மசேநி உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகையின் முதல் $60,000க்கு கூடுதலாக 1 விழுக்காடு வட்டியைத் தொடர்ந்து பெறுவர்.

55 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகையின் முதல் $30,000க்கு கூடுதலாக 2 விழுக்காடு வட்டியையும் அடுத்த $30,000க்கு கூடுதலாக 1 விழுக்காடு வட்டியையும் பெறுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!