நிதிப் பங்குப் பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் (செக்கியூரிட்டிஸ் அண்ட் ஃபியூச்சர்ஸ் ஆக்ட்) நிகழ்ந்ததாக நம்பப்டும் குற்றம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் தான் உதவி வருவதாக செவன்ஸ் அட்டெலியர் சொத்து ஆலோசனை நிறுவனம் புதன்கிழமையன்று தெரிவித்தது.
விசாரணை தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு வர்த்தக விவகாரப் பிரிவும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் தனக்கு உத்தரவிட்டதாக செவன்ஸ் அட்டெலியர் கூறியது. நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் கோ, நிர்வாக இயக்குநர் லிம் சியு ஃபாங், நிர்வாகக் குழு உறுப்பினர் டேங் யாவ் ஷி ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து அனுப்பப்பட்ட அல்லது அவற்றுக்கு வந்த மின்னஞ்சல்களும் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்களில் அடங்கும். சம்பந்தப்பட்டோருக்கு நிறுவனங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு இது பொருந்தும்.
2021ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் செவன்ஸ் அட்டெலியர் மேற்கொண்ட சில அறிவிப்புகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தனது பங்கு விற்பனையை நிறுத்திவைக்குமாறு செவன்ஸ் அட்டெலியர் புதன்கிழமை பிற்பகல் கேட்டுக்கொண்டது. வியாழக்கிழமை காலை பங்கு விற்பனை மீண்டும் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை 9.05 நிலவரப்படி செவன்ஸ் அட்டெலிரின் பங்கு விலை 21.6 வீழ்ச்சி கண்டது.

