தேசியக் கொடியை அணிந்து கொண்டு கூச்சலிட்ட ஆடவருக்குச் சிறை

தேசியக் கொடியை அணிந்து கொண்டு கூச்சலிட்ட ஆடவருக்குச் சிறை

1 mins read
cad3b99d-f874-43a6-ad50-ce215373f04c
படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூர் தேசியக் கொடியை ‘சூப்பர் ஹீரே’ போல் முதுகில் அணிந்துகொண்டு பொது இடத்தில் கூச்சலிட்ட ஆடவருக்கு இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் செப்டம்பர் மாதம் ஹவ்காங்கில் உள்ள ஒரு காப்பிக்கடையில் நடந்தது.

ராய் ரவி ஜகநாதன் என்ற 36 வயது ஆடவர் காலை 8:30 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் கூச்சலிட்டு உள்ளார்.

ஒவ்வொரு மேசையாக சென்று ‘ நான் கடவுள்’ என்றும் அவர் கூறியுள்ளார். தமது சட்டையை அவ்வப்போது கழற்றி அச்சுறுத்தும் வகையில் ரவி நடந்துகொண்டார்.

அதன்பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ரவி மீது பொது இடத்தில் தொல்லை தரும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆடவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

ரவிக்கு இது முதல் குற்றம் இல்லை. கடந்த ஜூலை மாதம் ஹவ்காங் காப்பி கடையில் குடையை வைத்துக்கொண்டு பொதுமக்களைப் பார்த்து ஆவேசமாக கத்தியுள்ளார்.

அதற்காக அவர் ஐந்து நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்