பாலியல் உறவு கொண்டு ஆடவர்களிடம் இருந்து பணம் பறித்தவருக்குச் சிறை

பாலியல் உறவு கொண்டு ஆடவர்களிடம் இருந்து பணம் பறித்தவருக்குச் சிறை

1 mins read
ecaec8aa-dae4-4430-85d0-03a28e8a2621
படம்: - பிக்சபே

இரண்டு ஆடவர்களுடன் அவர்களின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்ட டவின் லியன் கே சியாங், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் பறித்தார். வியாழக்கிழமையன்று 25 வயது லியனுக்கு மூன்றரை ஆண்டுச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

பாலியல் உறவில் ஈடுபட்டதைக் காணொளியாகத் தான் பதிவுசெய்துள்ளதாகவும் அதைச் சமூக ஊடகத்தில் வெளியிடப் போவதாகவும் மிரட்டி லியன் ஒருவரிடமிருந்து $700ஐப் பறித்தார்.

பாலியல் ரீதியாக ஈடுபடத் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறி மற்றோர் ஆடவரிடமிருந்து $100ஐப் பறித்தார்.

‘டேட்டிங்’ செயலி ஒன்றின் மூலம் லியனுக்கும் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்களுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்