அமெரிக்காவில் சிங்கப்பூர் ஆயுதப் படை: தானியக்க முறை, செயற்கை நுண்ணறிவு பயிற்சி

1 mins read
5422221c-6b45-468c-969a-a67e9b119a72
அமெரிக்காவின் ஐடஹோவில் உள்ள ராணுவத் தளத்தில் இந்தப் பயிற்சியை சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் மேற்கொண்டனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆயுதப் படையில் உள்ள வீரர்களுக்கு தானியக்க முறைகள், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஐடஹோவில் உள்ள ராணுவத் தளத்தில் இந்தப் பயிற்சியை சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் மேற்கொண்டனர்.

இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் போர் நேரங்களில் பெரிய அளவிலான ஆபத்துகளை தவிர்க்க உதவும்.

கூடுதலாக போர்க்களத்தில் இருந்து தரவுகளை திரட்டவும், களத்தில் இருந்து விரைவாக தகவல்களையும் நிலைமையையும் அதிகாரிகள் பெறமுடியும்.

ஈராண்டுக்கு ஒருமுறை அமெரிக்காவின் ஐடோஹேவில் உள்ள மலைக்குகீழ் உள்ள தளத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையினர் பயிற்சி மேற்கொள்வார்கள். இம்முறை செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடக்கிறது.

பயிற்சி நடக்கும் இடம் கிட்டத்தட்ட சிங்கப்பூரை விட 20 மடங்கு பெரியது. கிட்டத்தட்ட 1,100 சிங்கப்பூரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆளில்லா கவச வாகனம், தானாக இயங்கும் வானூர்திகள், மேம்படுத்தப்பட்ட 10 எஃப்-16 போர்ரக விமானங்கள் பயிற்சியில் இருந்தன.

முதல்முறையாக பலவகையில் பயன்படுத்தக்கூடிய ஏ330 விமானமும் பயிற்சியில் இருந்தது. அந்த விமானம் மூலம் வானத்தில் இருந்தே மற்ற போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பமுடியும்.

சிங்கப்பூரின் எஃப்-15 எஸ்ஜி போர் விமானங்கள், நான்கு ஏஹெச்-64டி அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், ஆறு அதிநவீன ஆகாயத் தாக்குதல் கருவிகள் போன்றவையும் பயிற்சியில் இருந்தன.

குறிப்புச் சொற்கள்