செருமிய, எச்சில் ஊற்றிய நாய்க்கு அருகே பயணம்; நியூசிலாந்து தம்பதிக்கு எஸ்ஐஏ $1,600 கொடுத்தது

2 mins read
892a1db4-6d12-4cad-bd5a-b3e280cb7ada
எஸ்ஐஏ விமானத்தில் பயணம் செய்த தம்பதியர் பயணம் முழுவதுமே வாயில் இருந்து எச்சில் ஊற்றிய, வயிற்றில் இருந்து வாயு பிரிந்த நிலையில் இருந்த நாய்க்கு அருகே அமர்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. - படம்: கில், வாரன்ஸ் பிரஸ் 

பாரிசில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் ஜூன் மாதம் நியூலாந்தைச் சேர்ந்த திருவாட்டி கில் பிரஸ் என்ற மாதும் அவருடைய கணவரான வாரன் என்பவரும் முதல்தர எக்கானமி பயணச்சீட்டை பயன்படுத்தி அதற்கான இருக்கைகளில் அமர்ந்து 13 மணி நேரம் பயணம் செய்தனர்.

அப்போது அவர்கள் இருக்கைகள் இருந்த வரிசையில் தரையில் ஒரு நாய் இருந்தது.

அந்த நாய் வேறு ஒருவருக்கு மனரீதியில் ஆதரவு அளிக்கும் நாயாகும்.

அந்த நாய், திரு பிரஸ்சின் கால்கள் அருகே செருமிக்கொண்டிருந்தது. அதன் உடலில் இருந்து வாயு பிரிந்த படியும் எச்சில் ஒழுகியபடியுமே இருந்தது.

துர்நாற்றம் தாங்க முடியாததை அடுத்து அந்தத் தம்பதியர் வேறு இருக்கைக்கு மாறிக்கொள்ள முயன்றனர். முடியாமல் போக கடைசியில் எக்கனாமி வகுப்பு இருக்கைக்கு மாறிக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வாரம் கழித்து அந்த மாது எஸ்ஐஏ நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

அந்த மாதுக்குப் பிரிமியம் எக்கனாமி வகுப்பு பயணத்திற்கும் எக்கனாமி வகுப்பு பயணத்திற்கும் இடைப்பட்ட கட்டண வேறுபாடு திருப்பிக் கொடுக்கப்பட்டது.

தம்பதி ஒவ்வொருவருக்கும் மொத்தம் NZ$982.50 (S$795) கிடைத்தது.

இது ஒருபுறம் இருக்க, அந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே எஸ்ஐஏ நிறுவனம் பயணப் பற்றுச்சீட்டுகளாக $320 தொகையைக் கொடுத்து இருந்தது.

எஸ்ஐஏ நிறுவனம் தங்களுக்குக் கொடுத்த தொகையை கண் தெரியாதவர்களுக்கு வழிகாட்டி உதவும் நாய்களுக்கான அறப்பணி நிறுவனத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்போவதாக அந்த நியூசிலாந்து தம்பதியர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்