பிரபல பாப் பாடகர்களான டெய்லர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பெய்பர் உள்ளிட்டவர்களின் முகங்களை சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தில் பார்க்க முடியும்.
புதிய தொழில்நுட்பம் மூலம் பார்க்க உண்மையாகவே நம்பகத்தன்மை அதிகம் கொண்ட வகையில் அந்த முகங்கள் இருக்கும்.
கலை அரும்பொருளகத்தில் புதிய காட்சிக்கூடம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
‘ஃப்ரூப் ஆஃப் பெர்சன்ஹுட்’ என்ற கருப்பொருளில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பாரம்பரியக் கலைக்கும் தற்போது மின்னிலக்கமாக உருவாக்கப்பட்ட கலைக்கும் உள்ள ஒற்றுமைகள், வேறுபாடுகள் போன்றவற்றை எடுத்துக்கூறும் வகையில் காட்சிக்கூடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, கலைத்துறையை மின்னிலக்கமயமாக்குவதில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் பற்றியும் காட்சிக்கூடத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.
புதிதாக திறக்கப்பட்ட காட்சிக்கூடத்தில் மேலும் சில கருப்பொருள்களில் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய இந்தக் காட்சிக்கூடம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிவரை இடம்பெற்றிருக்கும். காலை 10 மணி முதல் இரவு ஏழு மணி வரை கலைப்படைப்புகளை பொதுமக்கள் பார்வையிடலாம்.

