சிங்கப்பூரில் வங்கி தொடர்பான திருட்டுச் செயலி மோசடிகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதையொட்டி 11 பேர் கைதாகி இருக்கிறார்கள்.
அவர்களில் நான்கு பேர் பதின்ம வயது இளைஞர்கள். காவல்துறை சனிக்கிழமை இந்த விவரங்களைத் தெரிவித்தது.
பதின்ம வயது இளைஞர்களில் மூன்று பேர் ஆண்கள், ஒருவர் பெண். அவர்களுக்கு வயது 16 முதல் 19 வரை.
இதர ஏழு சந்தேகப்பேர்வழிகளில் ஆறு பேர் ஆடவர்கள், ஒருவர் மாது. அவர்களுக்கு வயது 20 முதல் 57 வரை.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் காவல்துறையைச் சேர்ந்த வேவுத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் செப்டம்பர் 11 முதல் 22 வரை எடுத்த நடவடிக்கைகளில் அந்தச் சந்தேகப்பேர்வழிகள் சிக்கினர்.
காவல்துறை விசாரணையில் இதர ஐந்து ஆடவர்களும் ஒரு மாதும் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.