காவல்துறை அதிகாரிகள், 25 வயது ஆடவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் அவர் பிடிபட்டார்.
தாம்சனில் விட்லி ரோட்டில் சாலை தடுப்பு ஒன்றில் இருந்த அதிகாரிகள் அந்த வழியே வந்த ஒரு காரை நிற்கும்படி உத்தரவிட்டனர்.
ஆனால் காரை ஓட்டிவந்தவர் அதிகாரிகளுக்குக் கீழ்படியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார்.
அதிகாரிகள் அவரை விரட்டிப் பிடித்தனர். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஐந்து மோட்டார்சைக்கிள்களில் விரட்டினர். ஒரு காவல்துறை காரும் விரட்டியது. கடைசியில் சந்தேக நபர் பிடிபட்டார்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை பின்நேரத்தில் நிகழ்ந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. விசாரணை தொடர்கிறது என்று காவல்துறை தெரிவித்தது.