தாவரங்களைக் கொண்டு புரதத்தைத் தயாரிக்கும் மேலும் பல உள்ளூர் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புப் பொருள்களைக் கடந்த இரண்டாண்டுகளில் ஐரோப்பா, அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
அவற்றில் டின்டில் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் ஒன்று. அது சைவ கோழி வகை உணவுப்பொருள்களைத் தயாரிக்கிறது.
ஜெர்மனியில் சோளக் கோழி போன்ற ஆறு வகையான உணவுகளை அது விற்கத் தொடங்கியது.
இடேகா குரூப் என்ற ஜெர்மனியின் ஆகப் பெரிய பேரங்காடி சில்லறை வர்த்தக நிறுவனத்துடன் சேர்ந்து டின்டில் ஃபுட்ஸ் அந்த நாட்டில் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது.
குரோத்வெல் ஃபுட்ஸ் ஹாப்பி என்ற நிறுவனம் பிரிட்டனில் தன்னுடைய சைவ மீன் வகைகளை விற்று வருகிறது.
ஒகாடோ என்ற பிரிட்டனின் சில்லறை வர்த்தக நிறுவனத்துடன் சேர்ந்து ஆகஸ்ட் முதல் தனது பொருள்களை அது சந்தைப்படுத்தி வருகிறது.
செப்டம்பரில் டெஸ்கோ என்ற பேரங்காடிக் கடைகளிலும் குரோத்வெல் ஃபுட்ஸ் ஹாப்பி தயாரிப்புப் பொருள்கள் கிடைக்கும். பிரிட்டனில் தனது விற்பனையை மேலும் விரிவாக்கவும் அது திட்டமிடுகிறது. ஜெர்மனியிலும் விரிவடையவும் அது விரும்புகிறது.
சிங்கப்பூரில் கடந்த நான்காண்டுகளில் தாவர அடிப்படையிலான புரதப் பொருள்களைத் தயாரிக்கும் நவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை 40க்கும் மேலாகிவிட்டது என்று எண்டர்பிரைஸ்எஸ்ஜி அமைப்பின் உணவு தயாரிப்பு வேளாண் தொழில்நுட்பத் துறை இயக்குநர் திருவாட்டி ஷரோன் டே கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வழிவழியான உணவுப்பொருள்களைத் தயாரிக்கும் உள்ளூர் நிறுவனங்களில் மேலும் பல நிறுவனங்கள் சொந்தமாக தாவர அடிப்படையிலான புரதப் பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன என்றும் திருவாட்டி டே கூறினார்.

