வரும் அக்டோபர் 1ஆம் தேதி அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசியின் துணைத் தலைவர் பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஏற்கவிருக்கிறார்.
செப்டம்பரில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திரு தர்மன் சண்முகரத்னம் விலகியதால் இப்பதவி காலியானது.
அதிபர் தேர்தலில் திரு தர்மன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று செப்டம்பர் 14ஆம் தேதி அதிபராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஜிஐசியின் இயக்குநர் சபையில் இயக்குநராக இருந்து வரும் திரு வோங், ஜிஐசியின் தலைவரான பிரதமர் லீ சியன் லூங்கிற்கு உதவியாகச் செயல்படுவார்.
திரு தர்மனின் விலகலைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ஜிஐசியின் முதலீட்டு உத்திப்பூர்வ குழுவுக்கு திரு வோங் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
திரு தர்மனுக்குப் பிறகு சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் கடந்த ஜூலையில் திரு வோங் நியமனம் பெற்றார்.