சிங்போஸ்ட் அலுவலகங்களில் ஃபெட்எக்ஸ் வாடிக்கையாளர்கள் பொட்டலங்களை அனுப்பலாம்

சிங்போஸ்ட் அலுவலகங்களில் ஃபெட்எக்ஸ் வாடிக்கையாளர்கள் பொட்டலங்களை அனுப்பலாம்

1 mins read
dbdbf4af-c28b-4027-b723-5eceb236fc71
படம்: - ஃபெட்எக்ஸ்

சிங்போஸ்ட் நிறுவனமும் ஃபெட்எக்ஸ் நிறுவனமும் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

சிங்போஸ்ட் அலுவலகங்களில் ஃபெட்எக்ஸ் வாடிக்கையாளர்கள் பொட்டலங்களை அனுப்பலாம்.

பொட்டலங்களை சிங்போஸ்ட், ஃபெட்எக்ஸ் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும்.

இதற்கு கூடுதல் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை.

இது சோதனை முயற்சியாக ஆறு அலுவலகங்களில் மூன்று மாதம் நடக்கும்.

பொங்கோல், ராஃபிள்ஸ் பிளேஸ், தெம்பனீஸ், உட்லண்ட்ஸ் செண்ட்ரல், ஜூரோங் வெஸ்ட், மரீன் பரேட் ஆகிய இடங்களில் இந்த புது வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இந்த புது திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்க முடியும் என்று இரு நிறுவனங்களும் நம்பிக்கைத் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்