ஆசிரியராக வேலை பார்த்த ஆடவர் ஒருவர் 2019ஆம் ஆண்டில், தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்த ஏழு வயது சிறுமி இருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த 36 வயது ஆடவர் இப்போது ஆசிரியர் வேலை பார்க்கவில்லை. அவர் மீது செவ்வாய்க்கிழமை மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரை அந்த ஆண்டில் அந்த ஆசிரியர் இரண்டு முறை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் பெயரை வெளியிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆகையால் அந்த ஆடவரின் பெயரையும் வெளியிட இயலவில்லை.
இதனிடையே, அந்த ஆடவர் 2022ல் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் இப்போது வேறு எந்த பள்ளியிலும் வேலை பார்க்கவில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
வழக்கு அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.