செப்டம்பர் மாதக் கவிமாலை சந்திப்பு, காலத்தை வென்ற தலைவர் லீ குவான் இயூ அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்வாக இடம்பெறும். சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. கவிமாலையின் 280வது சந்திப்பு எதிர்வரும் 30.09.2023 சனிக்கிழமை மாலை 6மணிக்கு தேசிய நூலகம், தளம் 5 பாசிபிலிட்டி அறையில் நடைபெறவிருக்கிறது. இம்மாதக் கவிமாலையின் சிறப்பு அங்கமாக தேசத் தந்தை லீ குவான் இயூ அவர்களைப் போற்றி மாணவர்கள் நடத்தும் இன்னிசைக் கவியாடல் மற்றும் கவிஞர்கள் பங்குபெறும் லீ குவான் இயூ கவிதைகள் முற்றோதல் இடம்பெற உள்ளது. அத்துடன் மாணவர்கள் படைக்கும் லீ கவிதைகள் மொழிபெயர்ப்பு அங்கமும் உண்டு.
கவிமாலை சந்திப்பு 280
1 mins read
படம்: - தமிழ் முரசு
குறிப்புச் சொற்கள்

