தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூருக்குப் புதிய தலைவர்

1 mins read
29be92cf-648f-45f5-ba8c-6fb595efb5cb
திரு டான் காய் ஹோ. - படம்: எஸ்பிஎச் மீடியா

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் புதிய தலைவராக திரு டான் காய் ஹோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்குரோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவரும் தலைமை நிர்வாகியுமான திரு டான் அக்டோபர் 1லிருந்து தமது புதிய பதவியை ஏற்பார்.

ஸ்கில்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் தற்போதைய தலைவரான திரு வோக் கிம் யின் வரும் சனிக்கிழமையன்று பணி ஓய்வுபெறுகிறார்.

56 வயது திரு டான் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிங்கப்பூர் அங்கீகார மன்றம் ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் இயக்குநர் சபைக்குத் திரு டானைக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வரவேற்கிறார்.

திரு டானின் அனுபவத்தால் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தொடர்ந்து மேம்படும் என்று தாம் நம்புவதாக அமைச்சர் சான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்