குடியிருப்பு வட்டாரத்தில் உடும்பைத் துரத்திய அதிகாரிகள்

குடியிருப்பு வட்டாரத்தில் உடும்பைத் துரத்திய அதிகாரிகள்

1 mins read
55a92704-a4ea-4077-bdfe-cb99666daf92
பிடிக்கத் துரத்தியவர்களிடமிருந்து தப்பிக்கத் தலைதெறிக்க ஓடிய உடும்பு - படம்:” டிக்டோக்

வழிதவறி தாமான் ஜூரோங் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த உடும்பு ஒன்றைப் பிடிக்க தேசிய பூங்காக் கழகத்தின் அதிகாரிகளும் குடியிருப்பாளர்கள் துரத்தினர்.

அதைப் பிடிக்க அவர்கள் பலமுறை முயன்றபோதும் அது சிக்கவில்லை.

அந்த உடும்பு வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் பொதுத் தாழ்வாரத்தில் தலைதெறிக்க ஓடுவதையும் அதைப் பிடிக்க பலர் முயற்சி செய்வதையும் காட்டும் காணொளி டிக்டாக்கில் திங்கட்கிழமையன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.

இறுதியில் அந்த உடும்பு பிடிப்பட்டது. அதைப் பிடித்து ஒரு கூண்டுக்குள் அடைத்தனர்.

அதைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி சில மணி நேரம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த உடும்பைக் குடியிருப்பு வட்டாரத்திலிருந்து தூரத்தில் உள்ள வனப் பகுதிக்குள் விடுவித்ததாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்