பலதுறை தொழிற்கல்லூரி ஊழியர் போல் நடித்து மோசடிக்காரர்கள் தகவல்தொழில்நுட்பச் சாதனம், பகுதிப்பொருள் விற்பனை நிறுவனங்களை ஏமாற்றுகிறார்கள்.
நிறுவனங்களை ஏமாற்றுகின்ற அத்தகைய மோசடிப் பேர்வழிகள், பல பொருள்களும் தங்களுக்குத் தேவை என்று முதலில் நிறுவனங்களைக் கேட்கிறார்கள்.
அவர்கள் கேட்கும் பொருள்கள் இல்லை என்று நிறுவனஙகள் சொல்லும்பட்சத்தில் சில நிறுவனங்களைத் தெரிவித்து அவற்றிடம் இருந்து பொருள்களை வாங்கித் தரும்படி அவர்கள் கேட்கிறார்கள்.
மோசடிப் பேர்வழிகள் தெரிவிக்கும் அத்தகைய நிறுவனங்களை உண்மையான நிறுவனங்கள் என்று நம்பி அவற்றிடம் அப்பாவி நிறுவனங்கள் முன்பணத்தைச் செலுத்திவிடுகின்றன.
தங்கள் வங்கிக் கணக்கிற்கு வரவேண்டிய பணம் வராதபோது அல்லது மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள இயலாதபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அப்பாவி நிறுவனங்கள் உணர்கின்றன.
ஆகையால் முன்பின் தெரியாதவர்களை நம்பி பணத்தை அனுப்ப வேண்டாம் என்றும் பொருள்கள் வந்து சேர்ந்த பிறகு பணத்தைக் கொடுக்கும்படியும் நிறுவனங்களுக்கு காவல்துறை ஆலோசனை கூறி உள்ளது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 22,339 மோசடிச் சம்பவங்கள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டில் இதே காலத்தின்போது 13,576 ஆக இருந்தது.
கணக்கிட்டுப் பார்க்கையில் மோசடிகள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 64.5% அதிகரித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலா $2,000 வரை இழந்துவிட்டனர்.
மோசடிகள் அதிகரித்துள்ள போதுலும் சென்ற ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் பாதியில் அப்பாவிகள் இழந்த தொகை கொஞ்சம் குறைந்து $334.5 மில்லியனாக இருக்கிறது.

