மாது மீது மோசடிக் குற்றச்சாட்டுகள்

மாது மீது மோசடிக் குற்றச்சாட்டுகள்

1 mins read
14f2c5cd-7e93-4003-9fad-3db37d117e64
தில்லுமுல்லு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் மார்கரெட் டோ சியூ ஹுன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

டோ சியூ ஹுன்,55, என்ற ஆறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான ஒரு மாது மீது வெள்ளிக்கிழமை இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுவதைப் போல் அவர் இரண்டு கடிதங்களைத் தயாரித்து அனுப்பி இருந்ததாகக் கூறப்படுகிறது.

முதல் கடிதம் 2023 ஜூன் 16ஆம் தேதியிடப்பட்டது. சுங்கத்துறை தளபத்தியத்திடம் தான் செலுத்தி இருந்த வைப்புத்தொகையைத் திருப்பித் தரும்படி முதல் கடிதத்தில் அந்த மாது கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது..

அந்த மாது 2023 ஜூன் 17 ஆம் தேதி இரணடாவது கடிதத்தை தயாரித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு அந்த மாது செலுத்தி இருந்த $8,000 பணத்தைத் திருப்பித் தரும்படி இரண்டாவது கடிதம் கேட்டுக்கொண்டது.

சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் இருந்து ஜூன் 22 ஆம் தேதி புகார் வந்ததை அடுத்து குற்றச் செயல்கள் அம்பலமாயின.

ஜூரோங் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் டோ யார் என்பதைக் கண்டுபிடித்து அவரை ஜூன் 27ஆம் தேதி கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்