தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறிய கார்களுக்குக் கூடுதல் சிஓஇ ஒதுக்கீடு

1 mins read
642dab24-17d4-43ab-a949-75df398b908f
அடுத்த இரு ஏலக்குத்தகைகளில் 780 சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறிய கார்களுக்காக அக்டோபரில் நடத்தப்படும் இரு ஏலக்குத்தகைகளில் கூடுதலாக 300 வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) மறுஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

அடுத்த இரு ஏலக்குத்தகைகளில் 780 சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும். சிறிய கார்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சராசரியாக வழங்கப்பட்ட 630 சான்றிதழ்களைவிட இது 23.9 விழுக்காடு அதிகம்.

வாகன வாயு வெளியேற்றம் குறித்த திட்டத்தில் செப்டம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கார் வாங்குவோரிடமிருந்து எழும் தேவையைப் பூர்த்திசெய்ய சிஓஇ மறுஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சிஓஇ விநியோகம், முந்திய காலாண்டில் பதிவிலிருந்து அகற்றப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்