தனியார் வீட்டு விலைகள் மூன்றாம் காலாண்டில் 0.5% ஏற்றம் கண்டுள்ளன. இதற்கு முந்திய காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் 0.2% வீழ்ச்சியடைந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. நகர்ப்புற விளிம்பில் உள்ள வீடுகள், புறநகர்ப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு உள்ளூர் மக்களிடையே தேவை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நகர்ப்புற விளிம்புப் பகுதியிலும் புறநகர்ப் பகுதியிலும் அதிகமான புதிய வீட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது வீட்டு விலை ஏற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதில் தரைவீடு அல்லாத வீட்டு விலை 2.1% ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரண்டாம் காலாண்டிலிருந்து விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 15% குறைந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இந்த வீழ்ச்சி 26% என்றும் நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மேலும், மூன்றாம் காலாண்டில் புதிய வீட்டுகளை வாங்குவோர் விகிதம் 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவே இதற்கு முந்தைய காலாண்டில் 40லிருந்து 60 விழுக்காடு வரை குறைந்தது என்று எட்மண்ட் டை நிறுவனத்தின் ஆய்வு, ஆலோசனைப் பிரிவின் தலைவர் லாம் செர்ன் வூன் கூறுகிறார்.

