சிறுமியைக் குறிவைத்தவரின் குற்றம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டது

சிறுமியைக் குறிவைத்தவரின் குற்றம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டது

1 mins read
2aa0d4ea-9372-474f-9f22-4b46f7982590
60 வயதாகும் லாவுக்கு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை 11 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2014ல் இல்லப் பணிப்பெண் மற்றும் மூத்த சகோதரியிடமிருந்து ஆறு வயதுச் சிறுமியை கவர்ந்திழுத்த ஆடவர் ஒருவர், படிக்கட்டுகளில் பாலியல் செயலில் ஈடுபட வைத்தார்.

பாசிர் ரிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் வெற்றுத்தளத்தில் பள்ளிப் பேருந்துக்காக அவர்கள் காத்திருந்தனர்.

அச்சிறுமியின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்தார். அச்சிறுமியின் டீசட்டையில் அந்த ஆடவரின் மரபணுக் கூறுகள் கண்டறியப்பட்டன. ஆனால், பின்னர் அவற்றுக்கான தடயங்களைக் கண்டறிய முடியாமல் போனது.

பாசிர் ரிசில் சீருடையில் தொடக்கப்பள்ளி மாணவிகளைத் தொடர்ந்து குறிவைத்த லாவ் செங் கீ எனும் அக்குற்றவாளி, எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

குற்றப் பின்னணி கொண்டிராத லாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நீதி நிலைநாட்டப்பட்டது. ஒன்பது வயதுச் சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தர முன்வந்த லாவை அவளுடைய தந்தை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, காவல்துறையை அழைத்தார்.

சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு சிறுமியின் முன்னிலையில் லாவ் ஆபாசச் செயலில் ஈடுபட்டதாக துப்புரவாளர் ஒருவர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார்.

லாவின் கைதுக்குப் பிறகு அவரிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிக்கும் 2014ல் அவரிடமிருந்து பெறப்பட்ட மரபணு தொகுப்புக்கும் இடையே தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இப்போது 60 வயதாகும் லாவுக்கு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. 2014 பிப்ரவரி 21ஆம் தேதி படிக்கட்டுகளில் அந்த ஆறு வயதுச் சிறுமியிடம் புரிந்த செயல் தொடர்பில், பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்தை லாவ் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
சிறைபாலியல்சிறுமிமரபணு