தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைதியின் பணத்தை எடுத்ததாகச் சிறை அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 mins read
158c80e0-9875-4bce-8124-0ca3063b244c
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் சிறைத் துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கைதியின் பணம் 406 வெள்ளியை எடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பின்னர் அந்த அதிகாரி பணம் கிடைத்துவிட்டதாகவும் காவல்துறையினரிடம் பொய் கூறியுள்ளார்.

முகமது ரஹாடியன் காசிம் என்ற 48 வயது அதிகாரி மீது செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ரஹாடியன் மீது நம்பிக்கை மோசடி, பொய் தகவல் கொடுத்தது, நீதித்துறை செயல்படாமல் இருப்பதைத் தடுத்தது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அப்பர் சாங்கி ரோடு நார்த்தில் உள்ள எஸ்2 வளாகத்தில் கைதிகளின் பொருள்களை வாங்கி வைக்கும் அறையில் ரஹாடியன் பணத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி காலை 10 மணி வாக்கில் நடந்ததாக நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

மூன்று நாள்களுக்கு பின்னர் ரஹாடியன் அந்த 406 வெள்ளியை மீண்டும் கைதியின் உடைமைகளுக்குள் வைத்தார்.

அது விசாரணைக்கு இடையூறாக மாறியது.

தாம் துணிகளுக்கு இஸ்திரி போடும் போது அந்தப் பணத்தை கண்டுபிடித்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் பொய் கூறியுள்ளார்.

அக்டோபர் 25ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பொதுப்பணி ஊழியர் மீது நம்பிக்கை மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்