மோட்டார் சைக்கிள் மோதி 82 வயது பாதசாரி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் மோதி 82 வயது பாதசாரி உயிரிழப்பு

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Oct 2023 - 6:10 pm

1 mins read

தோ பாயோ பகுதியில் திங்கட்கிழமை இரவு 7:20 மணியளவில் 82 வயது பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

அதில் அந்த பாதசாரி மாண்டார்.

சம்பவம் லோரோங் 1 தோ பாயோவில் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், காயமடைந்த ஆடவரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் காவல்துறை தெரிவித்தது.

மருத்துவமனைக்கு அனுப்பும்போது ஆடவர் சுயநினைவு இல்லாமல் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பாதசாரி சாலையைக் கடக்கும் போது மோட்டார் சைக்கிள் ஆடவர் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் ‌ஷின் மின் டெய்லி நாளிதழிடம் தெரிவித்தார்.

ஆடவர் சாலையைக் கடக்கும்போது பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்ததா இல்லையா என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 27 வயது ஆடவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து