தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஞ்சல் கட்டணம் உயர்ந்தாலும் இதர நாடுகளைவிட அதிகமாக இருக்காது

1 mins read
f5b09e2f-865e-4f5f-a46a-ba68d45df2ba
 சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் உயர்ந்தாலும்கூட அது இதர நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில்தான் இருக்கும். - படம்: கோப்புப்படம்

சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் இன்னும் சில நாட்களில் உயரும்.

கட்டணம் அதிகரித்த பிறகும் இதர நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில்தான் இங்கு கட்டணம் தொடர்ந்து இருக்கும் என்று தகவல் தொடர்பு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.

நடைமுறைச் செலவு கூடுகிறது. அதே வேளையில் அனுப்பப்படுகின்ற அஞ்சல்களின் அளவும் குறைகிறது. அதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் சிங்போஸ்ட் நிறுவனம், அக்டோபர் 9ஆம் தேதி முதல் பொதுவான அஞ்சலுக்கான கட்டணத்தை 31 காசில் இருந்து 51 காசாக உயர்த்துகிறது. இது சுமார் 65% அதிகரிப்பாகும்.

இதற்கு முன் 2014ஆம் ஆண்டில்தான் கட்டணம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இதன் தொடர்பிலான உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த மூத்த துணை அமைச்சர், அஞ்சல் கட்டணத்தை உயர்த்த சிங்போஸ்ட் விடுத்த வேண்டுகோளைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்து இருப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கட்டணத்துடன் ஒப்பிடும் அளவில்தான் இருக்கும் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்