விரிவாக்கப் பணி; வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக வட்டப் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடங்களில் சில நாட்களில் மட்டும் ரயில் சேவைகள் முன்கூட்டியே முடிவடையும். அது மட்டுமல்லாமல் இரண்டு வட்டப் பாதை ரயில் நிலையங்களில் தலா ஒரு தடம் தற்காலிமாக மூடப்படும்.

இவ்வாண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ரயில் சேவை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. அப்போது இந்த மாற்றங்கள் செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும், எஸ்எம்ஆர்டியும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

ஏற்கெனவே உள்ள வழித்தடங்களுடன் வட்டப் பாதையின் 6வது கட்டம் மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் 4வது கட்ட விரிவாக்கம் இணைக்கப்படவிருக்கிறது.

அக்டோபர் 15, 22, 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய நான்கு நாட்களில் வட்டப்பாதையில் உள்ள ரயில் சேவைகள் அதிகாலை 12.38 வரைக்குப் பதிலாக இரவு பத்து மணி வரை மட்டுமே இருக்கும்.

புதிய தானியக்க ரயில் மேற்பார்வை கட்டமைப்பை சோதிப்பதற்கு ஏதுவாக இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிக்கை குறிப்பிட்டது.

இதன் மூலம் ஓட்டுநர் இல்லா ரயில்களின் இயக்கம் முறைப்படுத்தப்படும்.

ரயில் சேவைகள் முன்கூட்டியே நிறுத்தப்படுவதால் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 13,700 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

வட்டப்பாதையின் 6வது கட்டப்பணிகள் முடிந்த பிறகு 23 புதிய ரயில்கள், மூன்று புதிய நிலையங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட கிம் சுவான் பணிமனை ஆகியவை புதிய மேற்பார்வை கட்டமைப்பின்கீழ் செயல்படும்.

வட்டப் பாதையின் விரிவாக்கப் பணிகள் 2026ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹார்பர்ஃபிரண்டுக்கும் மெரினா பே-க்கும் இடையே கூடுதலாக மூன்று நிறுத்துமிடங்கள் சேர்க்கப்படும்.

விரிவாக்கப்பட்ட தண்டவாளத்தை வட்டப் பாதையின் ஹார்பர் ஃபிரண்ட் நிலையத்துடன் இணைப்பதற்காக தெலுக் பிளாங்கா மற்றும் ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையங்களில் தலா ஒரு தாழ்வாரம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து மே 24ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையைப் பொறுத்தவரை இவ்வாண்டு நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில் சேவை அதிகாலை 5.56க்குப் பதிலாக காலை 8.00 மணிக்குப் பிறகு தொடங்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் வெள்ளிக் கிழமை சனிக் கிழமைகளில் இரவு சேவை 11.30 மணி வரை மட்டுமே இருக்கும்.

ஆனால் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 11, 12 தேதிகளில் விதிவிலக்காக ரயில்கள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வழித்தடங்களில் செய்யப்படும் சேவை மாற்றங்களால் வாரயிறுதியில் சுமார் 19,200 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இப்பாதையில் முதல் கட்ட விரிவாக்கத்துடன் 4ஆம் கட்ட விரிவாக்கத்தை இணைத்து சோதிப்பதற்காக ரயில் நேரங்கள் மாற்றப்படுவதாக ஆணையமும் எஸ்எம்ஆர்டியும் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!