தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷெங் சியோங், ஃபேர்பிரைஸ் பெயரில்போலி செயலிகள்: காவல்துறை எச்சரிக்கை

2 mins read
6daa7c1f-5661-4210-9763-f5175a7c33b4
போலி ஃபேர்பிரைஸ் படம், மோசடிக்காரர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல். - படம்: சிங்கப்பூர் காவல்படை

சிங்கப்பூர் பேரங்காடிகளான ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் பெயரில் போலி செயலிகள்

செயல்படுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

இத்தகைய மோசடி செயலிகள் மூலம் குறைந்தது 11 பேர் ஏமாற்றப்பட்டனர். செப்டம்பர் மாதத்திலிருந்து

அவர்கள் இழந்த மொத்த தொகையின் மதிப்பு 403,000 வெள்ளிக்கு மேல் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.

இது போன்ற சம்பவங்களில் உணவு, பிஸ்கட் தொடர்பான விளம்பரங்கள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த

விளம்பரங்களைத் தொட்டு உள்ளே செல்லும்போது வாட்ஸ்அப் தகவலுக்கு இட்டுச் செல்கிறது.

அதில், குறிப்பிட்ட செயலியை இறக்குமதி செய்தால் பொருட்களை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் அதிகாரபூர்வ செயலிகளுக்குப் பதிலாக போலி இணையத் தளத்திற்கும் இட்டுச் செல்லப்படுகிறது.

அப்படி இறக்குமதி செய்யப்படும் செயலிகள் ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் செயலிகளைப் போல இருக்கும்.

வாடிக்கையாளர்கள் போலி செயலிகளை தங்களுடைய கைப்பேசியில் ஏற்றியதும் அவர்களுடைய வங்கி விவரங்களை தொலைவிலிருந்து மறைமுகமாக செயல்படும் மோசடிக்காரர்கள் திருடிவிடுகின்றனர்.

வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களுக்கு பேநவ், வங்கி மூலம் பணம் செலுத்துதல் அல்லது முன்பணம் கட்டுதல் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் பிறகு வங்கிக் கணக்கில் தங்களுக்குத் தெரியாமலே பல பரிவர்த்தனைகள் நடந்துள்ளதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்த நிலையில் இத்தகைய போலி செயலிகளை இறக்குமதி செய்து நிறுவியவர்களுக்கு காவல்துறை பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளது. கைப்பேசியை “flight mode” என்ற நிலைக்கு மாற்றி, வைஃபை தொடர்பை துண்டித்த நிலையில் ‘தீங்கு நிரல்’ மென்பொருள் மூலம் சந்தேகமான செயலிகளை நீக்குவது யோசனைகளில் ஒன்று.

சந்தேகமான பரிவர்த்தனைகளை வங்கிக்குத் தெரிவித்து காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறை யோசனை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்