ஆடவர் ஒருவர் $8,000 பணத்திற்காக தன்னுடைய சிங்பாஸ் கணக்கு விவரங்களைக் கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அவருக்கு அந்தப் பணம் வந்து சேரவே இல்லை.
அதேவேளையில், அவருடைய கணக்கைப் பயன்படுத்தி இரண்டு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு அந்தக் கணக்குகளில் சுமார் $220,000 மோசடிப் பணம் போடப்பட்டது.
கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்காக மோசடிப்பேர்வழிகள் அவ்வாறு செய்தனர்.
ரெய்ன் லீ ஜிங் யு, 21, என்ற அந்த ஆடவர், சட்டவிரோதமான முறையில் நன்மை அடைவதற்காக தன்னுடைய சிங்பாஸ் விவரங்களைக் கொடுத்ததாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நண்பரிடம் இருந்து திருடியதாகக் கூறும் வேறொரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அந்த ஆடவர் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார். அப்போது அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்.