செங்காங் வட்டாரத்தில் கத்தியுடன் சுற்றிய நபர் கைது

செங்காங் வட்டாரத்தில் கத்தியுடன் சுற்றிய நபர் கைது

1 mins read
921bb0fc-b5b5-4123-a9ad-ea55c894c389
செங்காங் புளோக் 455A ஃபெர்வேல் சாலை அருகே கைது செய்யப்பட்ட நபரை காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். - படம்: ஷின் மின் டெய்லி

செங்காங் வட்டாரத்தில் கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வியாழக்கிழமை மதியம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

புளோக் 445ஏ ஃபெர்ன்வேல் சாலையில் மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட சச்சரவு தொடர்பில் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

“ஆயுதத்துடன் 37 வயது நபர் கைது செய்யப்பட்டார்,” என்றது காவல்துறை.

வீட்டில் தமது மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு அவர் கத்தியுடன் படிக்கட்டில் இறங்கி அவ்வட்டாரத்தில் சுற்றிக் கொண்டிருந்தார் என்று ஷின் மின் டெய்லி வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

அவரது 36 வயது மனைவிக்கு சில சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் அது பற்றி அந்த நாளேடு விவரிக்கவில்லை. பாலர் பள்ளி அருகேயும் அந்த நபர் கத்தியுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. தம்பதியின் இரு குழந்தைகளில் ஒன்று பாலர் பள்ளியில் படிப்பதாக நம்பப்படுகிறது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்