இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய எரிபடைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, வன்முறை நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறியது.
தாக்குதல்களில் பாதிப்படைந்துள்ள மக்களின் பாதுகாப்புக்கு அனைத்துத் தரப்பினரும் ஆனதைச் செய்யுமாறு அது வலியுறுத்தியது.
தாக்குதலில் சிங்கப்பூரர் எவரும் பாதிப்படைந்ததாகத் தகவல்கள் இல்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பான இடங்களின் அருகே இருக்குமாறும் இஸ்ரேலில் வாழும் சிங்கப்பூரர்களை அமைச்சு அறிவுறுத்தியது.
இஸ்ரேலின் தெற்குப் பகுதிக்குப் பயணம் செய்வதைத் முற்றிலும் தவிர்க்குமாறு அமைச்சு கூறியுள்ளது.
இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளோர், வெளியுறவு அமைச்சுடன் உடனே மின்பதிவு செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூர் தூதரக உதவி தேவைப்படுவோர் டெல் அவிவில் உள்ள 24 மணி நேரமும் இயங்கும் அதன் அலுவலகத்தை நாடலாம்.
டெல் அவிவ் சிங்கப்பூர் தூதகரம்:
தொடர்புடைய செய்திகள்
தொலைபேசி: +972-3-7289334
அவசரத் தொடர்புக்கு: +972-5-0697-6188
மின்னஞ்சல்: singemb_tlv@mfa.sg
வெளியுறவு அமைச்சு அலுவலகம்:
தொலைபேசி:: +65-6379-8800/8855 (24-hour hotline)
மின்னஞ்சல்: mfa_duty_officer@mfa.gov.sg