சிசிஏ மாணவர் தேர்ந்தெடுப்புச் சோதனைகளை கைவிடும் பள்ளிகள்

இணைப்பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான (சிசிஏ) தேர்ந்தெடுப்புச் சோதனைகளை பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் இப்போது நடத்துவதில்லை.

மாணவர்கள் தங்கள் விருப்பங்களைத் தொடர வாய்ப்பு அளிப்பதும் ஏட்டுக்கல்விச் செயல்திறனில் செலுத்தும் ஒருமித்த கவனத்தை மாணவர்கள் குறைத்துக் கொள்ள வசதி செய்து தருவதும் இதன் நோக்கம்.

கல்வி அமைச்சு ஒரு முன்னோடித் திட்டம் பற்றிய விவரங்களை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அந்த முன்னோடித் திட்டம் 2020ல் தொடங்கப்பட்டது.

எட்டுப் பள்ளிக்கூடங்கள், தங்களுடைய சிசிஏ விருப்ப அணுகுமுறைகளுக்குத் தேர்ந்தெடுப்பு சோதனைகள் இன்றி மாணவர்களை ஒதுக்குவதால், தங்களின் நாட்டங்களை, ஆற்றல்களைத் தொடர மாணவர்களுக்கு எப்படி ஆதரவு கிடைக்கும் என்பதைக் கண்டறிய அந்த முன்னோடி ஆய்வு தொடங்கியது.

அந்த முன்னோடித் திட்டத்தில் வெவ்வேறான மூன்று அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டன.

கல்வி அமைச்சு, 2018 முதல் பள்ளி விளையாட்டுகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியது. மாணவர்கள் அவற்றில் கலந்துகொள்ள அதிக வாய்ப்பு அளிப்பது அந்த மாற்றங்களின் நோக்கம்.

பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் சிசிஏவுக்கு மாணவர்களைத் தேர்ந்து எடுக்கும் சோதனைகளை நடத்துவதில்லை என்று தெரிவித்த அமைச்சு, இருந்தாலும் சில பள்ளிக்கூடங்கள் இன்னமும் அவ்வாறு செய்யக்கூடும் என்றது.

சில சிசிஏக்களுக்கு வளங்கள் போதாதவையாக இருக்கலாம் என்பதே இதற்கான காரணம்.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிசிஏ பங்கெடுப்பு கட்டாயமானது.

அதேவேளையில், தொடக்கநிலை மேல்வகுப்பு, புகுமுக வகுப்பு நிலையில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிசிஏக்களில் பங்கெடுக்கிறார்கள் என்று அமைச்சு தெரிவித்தது.

பெய் சுன் பொதுப் பள்ளியின் விளையாட்டுக் கல்வி, சிசிஏ துறை தலைவரான திரு ஜாசன் யாய், மாணவர்களை சிசிஏக்களுக்குப் பிரிக்கும் முறையை திருத்தி அமைக்க இந்தப் பள்ளி முடிவுசெய்ததாகக் கூறினார்.

இதன்மூலம் மாணவர்கள் அவர்களின் விருப்பங்களில் கவனத்தைச் செலுத்த அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றார் அவர்.

இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய தேசிய கல்விக் கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜாசன் டான், சிசிஏக்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் சோதனையைக் கைவிடுவதால் மேலும் அதிக மாணவர்கள் சிசிஏக்களை அதிகமாக எட்ட முடியும் என்றார்.

இது பற்றி கருத்து கூறிய கேரக்டர் அண்ட் லீடர்ஷிப் அகெடமி என்ற குணநல தலைமைத்துவப் பயிலகத்தின் நிர்வாக இயக்குநர் திரு டீலேன் லிம், தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை சிசிஏ ஈடுபாடு என்பது கண்டுபிடிப்பு, மேம்பாடு ஆகியவற்றைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாணவர்கள் வெவ்வேறான நடவடிக்கைகளை முயற்சி செய்து பார்த்து கடைசியில் தங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!