பாசிர் ரிஸ் ஃபேர்பிரைஸ்கடையில் எலி

பாசிர் ரிஸ் ஃபேர்பிரைஸ்கடையில் எலி

1 mins read
35fcb7f7-4411-4bfb-8119-6f66a5c86140
பாசிர் ரிஸ் வெஸ்ட் பிளாசாவில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் கடையில் விற்பனைக்கு ரொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் எலி ஒன்று காணப்பட்டது.  - படம்: டிக்டாக்

பாசிர் ரிஸ் வெஸ்ட் பிளாசாவில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் கடையில் விற்பனைக்கு ரொட்டி வைக்கப்பட்டுள்ள அலமாரியில் எலி ஒன்று காணப்பட்டது.

திருவாட்டி அயூனி என்ற மாது எலியைக் காட்டும் 18 வினாடி காணொளியை டிக்டாக்கில் பதிவேற்றினார்.

அந்த மாது அந்தக் கடையில் இரவு சுமார் 11 மணிக்கு மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது அந்த எலியைப் பார்த்தார். எலியைப் பற்றி கடை ஊழியர்களிடம் அந்த மாது கூறினார்.

எலியின் அளவைப் பார்த்து தான் பயந்துவிட்டதாகக் கூறிய அந்த மாது, இருந்தாலும் ஃபேர்பிரைஸ் கடை மீது தனது நம்பிக்கை குறைந்துவிடவில்லை என்றார்.

அந்தக் கடையில் 15 ஆண்டுகாலமாக பொருள்களை வாங்கி வருவதாகக் கூறிய அந்த மாது, வாரம் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் அந்தக் கடைக்குச் செல்வதுண்டு என்றார்.

இதனிடையே, எலி பற்றி கருத்து தெரிவித்த ஃபேர்பிரைஸ் குழுமத்தின் பேச்சாளர், அதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.

எலி பற்றி அந்த மாது கூறிய உடனேயே அந்த இடத்தில் இருந்த பொருள்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன.

துப்புரவு நடைமுறைக்கு ஏற்ப அந்த இடம் மருந்து அடித்து சுத்தப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்