ஏற்றுமதி குறைவதால் சிங்கப்பூர் நாணயத்தின் மீள்திறனுக்குச் சோதனை வரலாம்

ஏற்றுமதி குறைவதால் சிங்கப்பூர் நாணயத்தின் மீள்திறனுக்குச் சோதனை வரலாம்

2 mins read
5fde47d7-1ce7-462c-b82c-95cfd044265a
டிசம்பர் மாத இறுதி முதல் அமெரிக்க டாலருக்கு எதிராக சிங்கப்பூர் நாணயம் 2% மதிப்பு குறைந்து இருக்கிறது என்றாலும் ஆசிய நாணயங்களைப் பொறுத்தவரை சிங்கப்பூர் வெள்ளியின் செயல்திறன் சிறப்பாகவே இருந்து வந்துள்ளது. -  படம்: சாவ் பாவ் 

இந்த ஆண்டில் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடியது. என்றாலும் சிங்கப்பூர் நாணயம் நல்ல முறையில் அதைத் தாக்குப்பிடித்துச் சமாளித்து வந்துள்ளது.

இருந்தாலும் சிங்கப்பூர் வெள்ளியின் மீள்திறனுக்கு விரைவில் சோதனை வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

டிசம்பர் முதல் அமெரிக்க டாலருக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 2% குறைந்து இருக்கிறது. இருந்தாலும்கூட ஆசியாவைப் பொறுத்தவரை சிங்கப்பூர் நாணயம் முன்னணியில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

இருந்தாலும் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி வேகம் குறைவதால் சிங்கப்பூர் நாணயம் தரவரிசையில் கீழே இறங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சிங்கப்பூர் வெள்ளி வரும் மாதங்களில் ஆசியாவின் நாணயங்கள் அளவுக்கு செயல்திறனைக் கொண்டிருக்காது என்று ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கி, ஓசிபிசி வங்கி, எஸ்இபி என்ற சுவீடன் வங்கி ஆகியவற்றைச் சேர்ந்த பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புறச்சூழல் சரியில்லை. இந்த நிலையில், இதர ஆசிய நாணயங்களைவிட சிங்கப்பூர் வெள்ளி மேலும் அதிக செயல்திறனைக் கொண்டிருக்கும் என்பதற்கான வாய்ப்பு அவ்வளவாக இல்லை என்று ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கி பகுப்பாய்வாளர் நிக்கோலஸ் சியா கருத்து கூறினார்.

சிங்கப்பூரின் எண்ணெய் சாராத ஏற்றுமதிகள் தொடர்ந்து 11வது மாதமாக ஆகஸ்ட்டில் குறைந்தன.

இது உலகளவில் தேவை குறைந்து வருவதைக் காட்டுகிறது. இந்த நிலவரம் சிங்கப்பூர் நாணயத்திற்கு ஒரு சவாலாக இருக்கும். சிங்கப்பூரின் பொருளியல் வர்த்தகத்தைச் சார்ந்து இருக்கிறது என்பதே இதற்கான காரணம்.

இந்நிலையில், சிங்கப்பூர் நாணய ஆணையம் அக்டோபர் 13ஆம் தேதி தன்னுடைய கொள்கை அறிவிப்பை வெளியிடவிருக்கிறது. பலரின் கவனமும் இப்போது அதன் மேல் திரும்பி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்