சிங்கப்பூரில் அஞ்சல் சேவை தொடங்கி 165 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் சிங்போஸ்ட் நிறுவனம் ஐந்து அஞ்சல் தலைகள் தொகுப்பை வெளியிடத் தொடங்கி உள்ளது.
அவற்றின் விலை 60 காசு முதல் $1.50 வரை.
அந்த அஞ்சல் தலைகள் சிங்கப்பூரின் அஞ்சல் சேவையின் உருமாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.
அஞ்சல் சேவையில் கடந்த பல ஆண்டுகளாக இடம் பெற்று வந்துள்ள முக்கியமான நிலவரங்களை அவை எடுத்துக்காட்டுவதாக சிங்போஸ்ட் நிறுவனம் தெரிவித்தது.
அந்த ஐந்து அஞ்சல் தலைகளும் ஐந்து கருப்பொருள்களைக் கொண்டவை.
காலனித்துவப் பாரம்பரியம், முதலாவது விமான அஞ்சல் வருகை, ஒவ்வொரு கடித விநியோகத்தையும் முக்கியமாக்குவது, புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்குவது, விவேகமான, நிலையான எதிர்காலம் ஆகியவை அந்த ஐந்து கருப்பொருட்களாகும்.
சிறப்புத் தேதி பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகள் தங்க வண்ண மையில் தயாரிக்கப்பட்டவை. அவற்றையும் அக்டோபர் 9 முதல் 31ஆம் தேதி வரை ஃபுல்லர்டனில் உள்ள அஞ்சல்தலை நிலையத்திலும் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் தலை கடையிலும் வாங்கலாம்.
அஞ்சல் தலைகளுடன் கூடிய முதல் நாள் உறை $6.60 விலை உள்ளது. அன்பளிப்பு உறை $7.70 விலை. இவற்றையும் அஞ்சலகங்களில், அஞ்சல் தலை கடைகளில் இருப்பு தீரும் வரை வாங்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு shop.singpost.com என்ற முகவரியிலும் வாங்கலாம்.

