தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார் மோதி சைக்கிளோட்டி காயம்

1 mins read
7d2d6776-edfd-45bb-a6b6-c02bf27eab16
ஃபுல்லர்ட்டன் சாலையில் மாலை 5.10 மணிக்கு விபத்து நிகழ்ந்தது. - கோப்புப் படம்: எஸ்ஜி ரோட்விஜிலெண்ட் / ஃபேஸ்புக்

ஒன் ஃபுல்லர்ட்டன் கடைத் தொகுதி முன்பு கார் மோதியதில் சைக்கிளோட்டி ஒருவர் காயம் அடைந்தார்.

ஃபுல்லர்ட்டன் ரோடு வழியாக உள்ள பாதசாரிகள் கடக்குமிடத்தில் சைக்கிளில் ஒருவர் கடந்து செல்வதை எஸ்ஜிஆர்வி அட்மின் என்ற குழு, ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளி காட்டியது.

அப்போது நான்கு தடச் சாலையின் இடதுகோடியில் பயணம் செய்த பச்சை நிறக் கார் ஒன்று, சைக்கிளோட்டி மீது மோதியது. இதில் சைக்கிள் தூக்கி எறியப்பட்டது.

காணொளியில் காயம் அடைந்த சைக்கிள் ஓட்டி அசையாமல் கிடந்தார். 56 வயதுடைய அந்த நபர் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தது.

விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து

தொடர்புடைய செய்திகள்