சிங்கப்பூரில், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 2020ஆம் ஆண்டில் சந்தித்த தனது மாணவனுக்கு ஈராண்டுகளுக்குப் பிறகு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கினார்.
அதன் தொடர்பில், அந்த 15 வயது மாணவன் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தான்.
பாதிக்கப்பட்ட மாணவனின் அடையாளத்தைப் பாதுகாக்க, அந்த 64 வயது ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
16க்குக் குறைவான வயதுடைய ஒருவரை பாலியல் ரீதியாகத் தொடர்புகொண்ட குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியருக்கு மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்குக் குறைந்தது ஒரு மாதச் சிறைத்தண்டனையை விதிக்குமாறு அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் லீ டா ஸுவான் நீதிமன்றத்தில் முன்னதாகக் கேட்டுக்கொண்டார்.
ஓர் ஆசிரியராக மாணவனிடம் அக்கறை செலுத்துவதற்குப் பதிலாக, தனது பதவியைப் பயன்படுத்தி, அவனோடு பாலியல் ரீதியிலான உரையாடலை அவர் நடத்தியதாக வழக்கறிஞர் கூறினார்.
இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குற்றவாளியின் வேலை நிலை குறித்து கல்வி அமைச்சிடம் தகவல் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.