வெடிகுண்டு மிரட்டல்: ஸ்கூட் விமானம் அவசரமாக சிங்கப்பூர் திரும்பியது

சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மீண்டும் சாங்கி விமான நிலையத்தில் வியாழக்கிழமை மாலை 6.27 மணிக்குத் தரையிறங்கியது.

அந்த விமானம் சிங்கப்பூரை விட்டு வியாழக்கிழமை மாலை 4.11 மணிக்குப் புறப்பட்டது என்றும் விமானம் பறந்து ஒரு மணிநேரத்துக்குப் பிறகு ‘வெடிகுண்டு மிரட்டல்’ காரணமாக அதை மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பி வரச் சொல்ல முடிவெடுக்கப்பட்டது என்று அந்த மலிவுக் கட்டண விமானத்தின் பேச்சாளர் கூறினார்.

ஆகாயத்திலிருந்து அந்த விமானத்தைப் பாதுகாப்பாக சாங்கி விமான நிலையத்துக்குக் கொண்டு வந்து சேர்க்க சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. தரையில் அவசரநிலை சேவைகளும் முடுக்கிவிடப்பட்டன.

“TR16 விமானம் சிங்கப்பூரில் பத்திரமாக மாலை 6.27 மணிக்குத் தரையிறங்கியதும் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்றும் அந்தப் பேச்சாளர் கூறினார்.

“வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் ஸ்கூட் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் புலனாய்வில் ஒத்துழைத்து வருகிறது. இது பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால், கூடுதல் விவரங்கள் அளிக்க முடியாததற்கு வருந்துகிறோம்,” என்றும் பேச்சாளர் மேலும் சொன்னார்.

“விமானச் சேவை தடைக்கும் இடையூறுகளுக்கும் ஸ்கூட் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் சிப்பந்திகளின் பாதுகாப்புக்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்,” என்றும் ஸ்கூட் பேச்சாளர் விவரித்தார்.

ஃபிளைட்ரேடார் எனும் விமானப் பாதை கண்காணிப்பு இணையத் தளத்தில் ஸ்கூட் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், மலேசிய கடலோரப் பகுதிகளில் சுற்றி சுற்றி பறந்து பின்னர் சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியது தெரிய வந்தது.

விமான நிலைய 1வது முனையக் கட்டடத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்ட விமானம், பெர்த்தில் இரவு 8.35 மணிக்குத் தரையிறங்குவதாக இருந்தது.

இரவு 7.40 மணி நிலவரப்படி, பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் அமர்ந்திருந்தனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத 30 வயது பயணி ஒருவர், விமானத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டிருப்பதாக மாலை 5.05 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

விமானத்தைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல போர் விமானங்கள் தென்பட்டபோது, பயணிகள் அதை ஆர்வமாகப் படம் எடுத்தார்கள் என்றும் அவர்களுக்கும் பெரிய பதற்றம் தென்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

பயணிகள் எவரும் சந்தேகப்படும் அளவுக்கு நடந்துகொள்ளவில்லை என்றாலும் விமானம் தரையிறங்கியதும் காவல்துறையினர் விமானத்துக்குள் வந்து இருவரை அங்கிருந்து அழைத்துச் சென்றதாகவும் அந்தப் பயணி கூறினார்.

அதன் பிறகு விமானி, பயணிகளிடம் வெடிகுண்டு மிரட்டல் பற்றி தெரிவித்தார் என்றும் அது அநேகமாக புரளியாக இருக்கலாம் என்றும் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விவரித்தார் என்றும் அந்தப் பயணி சொன்னார்.

சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், தற்காப்பு அமைச்சு ஆகியவற்றுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேல் விவரங்கள் தெரிந்துகொள்வதற்குத் தொடர்புகொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!