தூசு மூட்ட மதிப்பீடு, விமான, கடல்துறை பாதுகாப்பு பற்றி சிங்கப்பூர்-அமெரிக்கா விவாதிப்பு

சிங்கப்பூர்-அமெரிக்கா முதலாவது விண்வெளித்துறை பேச்சுவார்த்தை 

சிங்கப்பூரும் அமெரிக்காவும் தூசு மூட்டத்தைக் கண்டுபிடிப்பது, மதிப்பிடுவது, துணைக்கோளங்களைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்து, கடல்துறை பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுத் தொழிலில் ஈடுபடும் வாய்ப்புகள் பற்றி விவாதித்தன.

இரு நாடுகளும் முதன்முதலாக விண்வெளித்துறை பேச்சுவார்த்தையை நடத்தின.

சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதையொட்டி, இருதரப்பு விண்வெளி பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடந்தது.

அந்தப் பேச்சுவார்த்தை, விண்வெளித் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை, பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக இருக்கிறது.

புதிதாக தலை எடுக்கும் துறைகளில் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒத்துழைப்பு விரிவடைகிறது. இதற்கு அந்தப் பேச்சுவார்த்தை மேலும் ஓர் எடுத்துக்காட்டு என்று வியாழக்கிழமை கூட்டறிக்கை தெரிவித்தது.

காற்றுத் தரத்தை ஆராய்வது, தீ, புகை மூட்டத்தைக் கண்டுபிடிப்பது, மதிப்பிடுவது உள்ளிட்ட பல துறைகளிலும் கூட்டுத் திட்டங்களை மேற்கொள்வது பற்றி பரிசீலிக்க இரு தரப்புகளும் இணங்கின.

இரு தரப்புகளும் சேர்ந்து செயல்பட்டு துணைக் கோளங்கள் உதவியுடன் கடல் துறை பாதுகாப்பு, விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இணக்கம் காணப்பட்டது.

விண்வெளி சுற்றுச்சூழலைக் கட்டிக்காக்கவும் துணைக்கோள சுற்று வட்டப்பாதைகளில் தூய்மைக்கேடுகள் அதிகரிக்கும் பிரச்சினையைச் சமாளிக்கவும் இடம்பெறக்கூடிய கூட்டு முயற்சிகளை அந்தப் பேச்சுவார்த்தை மறுபரிசீலனை செய்தது.

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக ரீதியில் ஒரு வட்டமேசை மாநாடு நடந்தது. அதில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தனியார் விண்வெளி நிறுவனங்களும் ஆய்வு அமைப்புகளும் கலந்துகொண்டன.

அதையடுத்து இப்போது இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை அது விண்வெளி ஆய்வுகளில் புதிதாக ஈடுபடக்கூடிய ஒரு நாடாக இருக்கிறது.

சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்ட எக்ஸ்-எஸ்ஏடி என்ற துணைக்கோளம் 2011ல் மேலே ஏவப்பட்டது. அது முதல், ஆய்வு உருவாக்கம், வர்த்தகம், அரசாங்க பயனீடுகளுக்காக 30க்கும் மேற்பட்ட துணைக்கோளங்கள் மேலே பாய்ச்சப்பட்டு இருக்கின்றன.

பல விண்வெளி துணைக்கோள ஆய்வு நிலையங்களுடன் கூடிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டும் சிங்கப்பூரின் வளர்ந்து வரும் விண்வெளி துறையின் அங்கங்களாக இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!