வங்கி மோசடி; தலைகாட்டிய எண்ணெய் நிறுவன முதலாளி

வங்கி மோசடி; தலைகாட்டிய எண்ணெய் நிறுவன முதலாளி

1 mins read
a21c3203-b2a1-4ed8-b302-eaae9acb90bc
விசாரணையில் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக நேற்று நீதிமன்றத்துக்கு வந்த பலே ஆசாமி லிம் ஊன் குயின். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடி, ஏமாற்று வழக்கில் சிக்கியுள்ள ஹின் லியோங் டிரேடிங் என்ற எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

மோசடி செய்து வங்கியை ஏமாற்றி 111.7 மில்லியன் அமெரிக்க டாலரைப் பெற்ற குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார்.

லிம் ஊன் குயினுக்கு தற்போது வயது 81. கடந்த ஏப்ரல் மாதம் மூன்று குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டார். எச்எஸ்பிசி வங்கியை ஏமாற்றிய இரண்டு குற்றச்சாட்டுகள்; மோசடி ஆவணங்களைத் தயாரித்தது மற்றொரு குற்றச்சாட்டு.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

சைனா ஏவியேஷன் ஆயில் (சிங்கப்பூர்) கார்ப்பரேஷன், யுனிபெக் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் விற்பதற்கான ஒப்பந்தங்களைப்பெற்றுள்ளது போல் தோற்றத்தை ஏற்படுத்தி அவர் எச்எஸ்பிசி வங்கியை ஏமாற்றியிருக்கிறார் என்பது அரசுதரப்பு வழக்காகும்.

2020 ஏப்ரல் 17ஆம் தேதி ஹின் லியோங் தனது நிறுவனம் நொடித்துப் போவதற்கு தாக்கல் செய்தார். இதனால், உலகின் ஆகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று திவாலானது.

அதன் பிறகு விசாரணையை மேற்கொண்ட காவல்துறை, லிம் மீதான நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை வெளிக்கொணர்ந்தது.

குறிப்புச் சொற்கள்