நவம்பர் முதல் 2024 ஜனவரி வரைப்பட்ட மூன்று மாத காலத்தில் 12.9% அதிக வாகன சான்றிதழ்கள் கிடைக்கும்.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை கொடுக்கப்பட்டதைவிட 12.9% அதிகமாக மொத்தம் 12,774 வாகன உரிமைச் சான்றிதழ்கள் கிடைக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அடுத்த ஆண்டில் கார்கள், வர்த்தக வாகனங்களுக்கான சான்றிதழ்கள் தொடர்ந்து அதிகரிக்கும்.
மோட்டார்சைக்கிள்களுக்கான சான்றிதழ்கள் இந்த ஆண்டு அளவையே ஒத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
நவம்பர் முதல் ஜனவரி வரை சிறிய, ஆற்றல் குறைவான கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்கும் உரிய ஏ பிரிவு சான்றிதழ்கள் மொத்தம் 4,967 கிடைக்கும் என்றும் ஆணையம் தெரிவித்து உள்ளது.