சந்தேகத்திற்கிடமான துண்டுப் பிரசுரங்கள் குறித்து எச்சரிக்கை

சந்தேகத்திற்கிடமான துண்டுப் பிரசுரங்கள் குறித்து எச்சரிக்கை

1 mins read
a1568219-0e83-4b12-9085-95b710fb8ee7
துண்டுப் பிரசுரத்தில் பல எழுத்துப் பிழைகள் இருந்தன. கியூஆர் குறியீட்டை வருடியபோது சொந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டி இருந்தது. - படங்கள்: யுக்னா

நிதித்துறை ஆலோசகர் ஒருவரைச் சந்தித்தால் கொசுவிரட்டி விளக்குகள் இலவசமாகக் கிடைக்கும் என்று கூறும் பெயரில்லாத் துண்டுப் பிரசுரங்கள் தங்களுக்குக் கிடைத்து இருப்பதாக அங் மோ கியோ குடியிருப்பாளர் சிலர் கூறி இருக்கிறார்கள்.

இதன்தொடர்பில் கருத்துரைத்த சிங்கப்பூர் நாணய ஆணையம், சந்தேகத்திற்கு இடமான விளம்பரங்களைப் பார்த்தால் எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்படி பொதுமக்களை வலியுறுத்தியது.

அந்த விளம்பரத்தைப் பார்த்தவர்கள் கியூஆர் குறியீட்டை வருட வேண்டி இருந்தது. அதன்மூலம் ஓர் இணையத்தளத்திற்குச் சென்ற குடியிருப்பாளர்கள் அங்கு தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை எல்லாம் தெரிவிக்கவேண்டி இருந்தது.

அத்தகைய கொசுவிரட்டி விளக்குகள் இணையத்தளங்களில் $20 விலைக்கு விற்கப்படுகின்றன என்பது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்