சிங்கப்பூர் அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கும் $2.8 பில்லியன் கள்ளப்பண விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாரேனும் நன்கொடை அளித்து இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கும் வகையில் 2019 ஜனவரி முதல் நன்கொடையாளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும்படி அறப்பணி அமைப்புகளை அறப்பணி ஆணையர் வெள்ளிக்கிழமை வலியுறுத்தி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
சந்தேகத்திற்கிடமான நன்கொடைகள் ஏதாவது இருந்தால் அது பற்றி அறப்பணி அமைப்புகள் புகார் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையர் தெரிவித்து இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
ஆணையர் தெரிவித்து இருக்கும் ஆலோசனையில் கள்ளப்பண விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியலும் சேர்க்கப்பட்டு உள்ளது.
அந்தக் கள்ளப்பண விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் 10 பேரில் சிலரிடம் இருந்து நன்கொடைகளை பல அறப்பணி அமைப்புகள் பெற்று இருக்கின்றன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த வாரம் தெரிவித்தது.

