இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: கருத்துப் பகிர்வில் பொறுப்பு முக்கியம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: கருத்துப் பகிர்வில் பொறுப்பு முக்கியம்

2 mins read
45374d61-4a80-4bb3-9690-9da77f0e21d8
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடப்பது குறித்து அனைத்து சமய அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்து இருக்கிறது. - படம்: இபிஏ
இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் நடப்பது குறித்து அனைத்துச் சமய மன்றம் மிகுந்த கவலை தெரிவித்து இருக்கிறது.
இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் நடப்பது குறித்து அனைத்துச் சமய மன்றம் மிகுந்த கவலை தெரிவித்து இருக்கிறது. - படம்: இபிஏ

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் மூண்டுள்ள மத்திய கிழக்கு நிலவரம் பற்றி சிங்கப்பூரர்களிடம் உறுதியான கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும்.

இருந்தாலும் சிங்கப்பூரின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில், விரோதத்தைத் தூண்டும் வகையில் அவற்றை வெளிப்படுத்தக் கூடாது என்று சிங்கப்பூரின் மிகப் பழமையான சமய அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

‘அனைத்து சமய மன்றம்’ என்ற அந்த அமைப்பில் சிங்கப்பூரின் வெவ்வேறான 10 சமயங்களைச் சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள். அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அமைதி, ஐக்கியத்தைப் பேணி பலப்படுத்தும் வகையில் பொதுவான நன்னெறிகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி அது மக்களைக் கேட்டுக்கொண்டது.

ஒருவர் மற்றொருவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கருணையுடன், அக்கறையுடன் நடந்துகொள்வது இதற்கு அடிப்படையானது என்று அது கூறியது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அந்த மன்றம் மிகவும் கவலை தெரிவித்தது.

அந்த மோதலில் அப்பாவி மக்கள் உயிர் இழப்பது, சிங்கப்பூரில் மட்டுமன்றி உலகச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை ஒப்புக்கொள்வதாக அந்த மன்றம் குறிப்பிட்டது.

‘‘இப்போதைய நமது சமகால சமூகத்தில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள், கண்ணோட்டங்களை நாம் சந்திக்கிறோம். அவற்றில் சில கண்ணோட்டங்கள் சிலரிடம் உறுதியான நிலையில் இருக்கக்கூடும்,’’ என்று அந்த மன்றத்தின் தலைவர் நூர் மரைக்கான் கையெழுத்திட்டு இருந்த அறிக்கை தெரிவித்தது.

‘‘இருந்தாலும்கூட விரோதத்தை, கோபத்தைக் கிளப்பும் வகையில் பேச்சில் கருத்துகளைத் தெரிவிப்பதை நாம் தொடர்ந்து எப்போதுமே தவிர்த்துவிட வேண்டும். இது முக்கியமானது.

‘‘விரோதத்தை, கோபத்தைக் கிளப்பும் வகையில் கருத்துத் தெரிவிப்பது இதர சமூகத்தினரைக் காயப்படுத்தும். எல்லை மீறும்போது வன்செயலுக்கும் அது இட்டுச்செல்லும் என்று அறிக்கை எச்சரித்தது.

இணையம் வழி அதிவேகமாக தகவல்கள், செய்திகள் பரவுவதைச் சுட்டிக்காட்டிய அறிக்கை, இணையத்திலும் இதர பேச்சிலும் ஆக்ககரமான அணுகுமுறையையும் மதிப்பு, மரியாதைமிக்க போக்கையும் மேம்படுத்துவதே நம்முடைய ஒட்டுமொத்த பொறுப்பு என்றும் கூறியது.

உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் வியாழக்கிழமை தெரிவித்த கருத்துகளை அறிக்கை சுட்டிக்காட்டியது.

சிங்கப்பூரில் விலை மதிப்பில்லா அமைதி நிலவுகிறது. வெளியே நடக்கும் சம்பவங்கள் அந்த அமைதியைக் கெடுத்துவிட நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இதைப் பற்றி குறிப்பிட்ட அறிக்கை, புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தியது. இவ்வேளையில், சிங்கப்பூரில் உள்ள யூத நல்வாழ்வுக் கழகமும் பள்ளிவாசல்களும் ஐக்கியம், அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்