சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
சில நாள்களில் பிற்பகல் முதல் மாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென்று அது கூறியது.
“அக்டோபர் மாதப் பிற்பகுதியில் முற்பகலிலும் பிற்பகல் வேளைகளிலும் தீவு முழுவதும் குறுகிய நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்,” என்று வானிலை ஆய்வகம் குறிப்பிட்டது.
அக்டோபர் மாத முற்பகுதியைவிடப் பிற்பகுதியில் வெப்பநிலை குறைவாக இருக்குமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியசிற்கும் 34 டிகிரி செல்சியசிற்கும் இடைப்பட்டிருக்கும்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தென்கிழக்காசிய வட்டாரம் முழுவதும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறையும் சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வகம் கூறியது.

