சியர்ஸ் கடையின் முன்னாள் ஊழியர் ஒருவர், அவர் முன்பு வேலை பார்த்த இடத்தில் தனக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த சச்சரவு ஒன்றைக் காட்டும் காணொளியைப் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
ஜொனாத்தன் ஓங் ஜுன் ஜி, 29, என்ற அந்த ஆடவர் மீது புதன்கிழமை மூன்று அலைக்கழிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
புலன்விசாரணைக்காக மத்திய காவல்துறை பிரிவுக்கு வரத் தவறியதாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.
ராஃபிள்ஸ் கீயில் உள்ள லா பா சாட் உணவங்காடிக் கடைத் தொகுதியில் செயல்படும் சியர்ஸ் கடை ஒன்றில், 2023 ஜனவரி 1ஆம் தேதி இரவு 8 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவரைத் தகாத வார்த்தைகளைச் சொல்லி ஜொனாத்தன் ஓங் அவரை அவதூறு செய்தார் என்று கூறப்பட்டது.
அதிகாரிகள் அங்கு சென்றபோது அந்த ஆடவர் ஒத்துழைக்க மறுத்து அதிகாரிகளுக்குச் சவால் விடுத்தார். அந்தச் சம்பவத்தைக் கைப்பேசியில் படம் எடுத்து ஆறு காணொளிப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்.
அவற்றில் அதிகாரிகளைக் குறை சொல்லி அவர் எழுதி இருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

