ஆசியாவில் பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டில் 4.6% இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த வளர்ச்சி சென்ற ஆண்டில் 3.9% ஆக இருந்தது.
அனைத்துலக பண நிதியம் புதன்கிழமை இவ்வாறு கணித்து இருக்கிறது.
உலகச் சூழ்நிலை சவால்மிக்கதாக இருக்கிறது என்றாலும் கூட ஆசியாவின் பொருளியல் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு வளரும் என்று அது தெரிவித்து இருக்கிறது.
இருந்தாலும் சிங்கப்பூருக்கான 2023 வளர்ச்சி கணிப்பை அது குறைத்து இருக்கிறது. சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு 1.5% வளரும் என்று கடந்த ஏப்ரல் மாதம் பண நிதியம் கணித்து இருந்தது.
ஆனால், வளர்ச்சி 1% தான் இருக்கும் என்று இப்போது அது கூறுகிறது. சிங்கப்பூர் வளர்ச்சி அடுத்த ஆண்டில் சூடுபிடிக்கும்.
சிங்கப்பூர் பொருளியல் 2024ல் 2.1% வளரும் என்று அந்தப் பண நிதியம் வட்டார பொருளியல் வாய்ப்புகள் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
இதனிடையே, சீனாவின் பொருளியல் இந்த ஆண்டு 5% வளரும். அடுத்த ஆண்டு அது 4.2% ஆகக் குறைந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

