பூன் லே புளோக் கீழ்த்தள நூலகம் மூடப்படுகிறது

பூன் லே புளோக் கீழ்த்தள நூலகம் மூடப்படுகிறது

1 mins read
4a0904b2-46d6-4ba1-ba7e-46d2ac5ad2b5
பூன் லே சமூக நூலகத்தில் நூல் வைக்கும் அடுக்குகளில் ஏறும் சிறுவன் ஒருவன். - படம்: ஹெங்ஸ்டர் கோர்/ஃபேஸ்புக்

பூன் லேயில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் உள்ள சமூக நூலகம், திறந்த சில மாதங்களிலேயே மூடப்படுகிறது.

நூலகம் மூடப்படுவதற்கு அதன் இடம் நேர்த்தியாக இல்லாதது, சமூக முயற்சி போதாதது, புகார்கள் எழுவது போன்றவை காரணங்களாக குறிப்பிடப்பட்டன.

அந்த நூலகத்தைத் தொடங்கிய ஹெங்ஸ்டர் கோ என்பவர், செவ்வாய்க்கிழமை ஃபேஸ்புக்கில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

“என் சமூக நூலகத்தை மூடுகிறேன். மற்றவர்களுடன் பகிர்வதற்கென என்னிடம் ஏராளமான நூல்கள் உள்ளன,” என்று குறிப்பிட்ட அவர், விருப்பமுள்ளவர்கள் ஃபேஸ்புக்கில் தம்மிடம் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் இறுதிக்குள் அனைத்து நூல்களையும் அப்புறப்படுத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். பெற்றுக்கொள்ளப்படாத நூல்களும் அவற்றை வைக்கும் அடுக்குகளும் பின்னர் வீசப்படும்.

குறிப்புச் சொற்கள்