அவிவா, ஏஎக்ஸ்ஏ ஆகிய காப்புறுதி நிறுவனங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் வேறு ஒருவரும் தங்கள் சார்பில் நிதி ஆலோசனை சேவைகளை வழங்க உரிமம் பெறாதவர்களை நியமித்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர்களுக்குப் பல ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த ஐந்து பேரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ஒரு நிதித்துறை ஆலோசனை சேவையையும் வழங்கக்கூடாது;
இயக்குநர் போன்ற நிர்வாகப் பதவிகளை வகிக்கக் கூடாது;
எந்த ஒரு நிதித்துறை ஆலோசனை நிறுவனத்திலும் கணிசமான அளவுக்குப் பங்குதாரராக ஆகவும் கூடாது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தடை விதித்துள்ளது.
அந்த ஐவரில் அவிவா நிறுவனத்தின் முன்னாள் பிரதிநிதிகளான கெல்வின் டான் யோஷெங், விக்டர் வூ சாவ் ஆகிய இரண்டு பேருக்கும் 2023 ஜூன் 22 முதல் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
ஏஎக்ஸ்ஏ நிறுவனத்தின் முன்னாள் பிரதிநிதி ஜெரிமி டான் ஹோங்சியாங், திருவாட்டி டோங் ஹுய் ஸி இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
ஏஎக்ஸ்ஏ நிறுவனத்தின் முன்னாள் பிரமுகரான திருவாட்டி புவா ஷு ரோங் என்பவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தடைகள் 2023 அக்டோபர் 18 முதல் தொடங்கும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

