போதையில் வாகனம் ஓட்டி நிற்காமல் சென்றதாக 72 வயது மாது மீது குற்றச்சாட்டு

போதையில் வாகனம் ஓட்டி நிற்காமல் சென்றதாக 72 வயது மாது மீது குற்றச்சாட்டு

1 mins read
c6bccf62-54a7-4710-858f-fd55b1b36ef4
வோங் சின் தை என்ற 72 வயது மாது மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. - படம்: எஸ்டி கோப்புப்படம்

சின் லி எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான வோங் சின் தை என்ற 72 வயது மாது, மது குடித்துவிட்டு ஒரு காரை ஓட்டிச் சென்றதாகவும் வழியில் ஜூரோங் ஈஸ்ட்டில் தேபான் கார்டன்சில் இரண்டு போக்குவரத்து சிவப்பு விளக்கு சந்திப்புகளில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அந்த மாது மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்னதாக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் சாலைகளில் வழக்கமாக சோதனைகளை நடத்துவார்கள்.

அவர்கள் மார்ச் முதல் செப்டம்பர் வரை நடத்திய சோதனைகளில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் பலர் கைதாயினர். அவர்களில் அந்த மாதும் ஒருவர் என்று காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மது போதையில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. அது பொறுப்பற்ற செயல் என்று காவல்துறை நினைவு படுத்தியது.

வாகனம் ஓட்டிச் செல்வோர் அனைவரும் சட்டத்தை மீறக்கூடாது. சாலைகளை எல்லாருக்கும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்று அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்